சனி, 7 நவம்பர், 2015

பத்திரிக்கைகளில் வருகின்ற ராசிபலன்களை படிப்பது சரியா அல்லது தவறா ?ஒரு ஜாதகம் சிறப்பாக இருந்திட அது எவ்வாறு அமைந்திட வேண்டும் ?






அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


முனிவர்கள் இல்லாது யாகங்கள் இல்லை !!

இறைவன் இல்லாமல் உலகமே இல்லை !!

ஜோதிடம் இல்லாமல் எதுவுமே இல்லை !!


ஆம் அன்பர்களே !!

இதுதான் உண்மை. இது ஒன்றே வாழ்வினில் 

மிகமிக யதார்த்தங்கள் நிறைந்தது.   இந்த 

ஜோதிடமும் அதனால் கணிக்கப்பட்ட ஜாதகம் 

இன்றி நமது எதிர்காலத்தை நிர்ணயம் செய்திட 

இயலவே இயலாது அன்பர்களே. அந்த அளவு 

இந்த தெய்வாம்சம் பொருந்திய ஜோதிடக்கலை 

நமது முன்னோர்களாலும், ரிஷிகளாலும், வேத 

வித்தியார்த்திகளாலும், பண்டிதர்களாலும், 

மிகமிகத் துல்லிதமாக கணக்கிடப்பட்டு 

எதிர்காலத் தலைமுறையினர் என்று 

அழைக்கப்படுகின்ற நமக்காகவே அவர்கள் 

ஆக்கித் தந்திருக்கும் ஒரு அரிய பெரிய 

பொக்கிஷம்தான் இந்தக் ஜோதிடக்கலை 

என்பதில் எனக்கு எள்ளின் முனையளவுகூட 

ஐயம் இல்லை அன்பர்களே.


ஒரு ஜாதகத்தை எடுத்திக் கொண்டால், இது ஒரு 

யோகம் நிறைந்த ஒன்று, பிரபலமான ஒருவரது 

ஜாதகம் இது, உழைத்து முன்னேறியது, என்று 

நாம் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என 

கேட்டால் அதற்கெல்லாம் முக்கிய அம்சம் 

என்னவென்றால் ராசிக்கட்டத்தில் 

குறிப்பிடப்பட்டுள்ள லக்னமும் லக்னேசனும், 

அவன் எங்கே எந்த இடத்தில் அமர்ந்துள்ளான்

அது லக்னாதிபதிக்கு நட்பு வீடா, சமபல வீடா, 

எதிரி வீடா, உச்ச வீடா,அல்லது நீச வீடா 

என்பதனைப் பொறுத்தே அந்த ஜாதகம் சிறப்பாக 

அமைகிறது அந்த ஜாதகரும் அமைகின்றார்.


இங்கே நம்மில் அநேகர் நாளிதழ்களிலும் 

மற்றும் வாராந்திர புத்தகங்களிலும் வருகின்ற, 

மற்றும் எழுதப் படுகின்ற இராசி பலன்களை 

படிப்பதுஎன்ற வழக்கத்தை தவிர்த்திட 

இயலாதவராகவே இருக்கின்றோம் என்பதே 

உண்மையிலும் உண்மை ஆகும். ஆனால், 

அதைவிடவும் உண்மையானது இதைப்போன்ற 

ஒரு முட்டாள்த்தனமான செய்கை என்பது வேறு 

எதுவும் கிடையாது என்பதே ஆகும்.இவ்வாறு 

எழுதப்படுகின்ற அந்த இராசி பலன்கள் என்பது 

உண்மையானதா, அல்லது சரியானதா 

இவற்றிற்கு எல்லாம் மேலாக அதில் 

சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் நமது 

எதிர்கால வாழ்விற்கு வளம் சேர்ப்பவையாக 

உள்ளதா என்றுபார்த்தால் இவை அனைத்துமே 

இல்லாமல் ஒரு கற்பனை வளம் நிறைந்த 

பொய்கள் மட்டுமே மொத்த குறிப்புக்களாக 

முழுதும் நிறைந்துள்ளவையாகவே 

என்போன்ற ஜோதிடம் கற்றவர்களால் 

புரிந்துகொள்ளப்படுகிறது. மொத்தம் கிரகங்கள் 

என்பது ஒன்பது. அதில் சந்திரனை மட்டும் 

மையமாகவைத்து சொல்லப்படும் 

பலன்கள் எப்படி சரியாக இருக்கும். 


இங்கே நான் ஒரு வரலாற்று நிகழ்வு 

ஒன்றினைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். 

அது என்னவென்றால் :-


கவிஞர், கவியரசர், கவிச்சக்கரவர்த்தி, 

என்றெல்லாம் நம்மால் வர்ணிக்கப்படுகின்ற 

மறைந்த கண்ணதாசன் என்ற முத்தையா 

சினிமாத்துறையினுள்ளாக நுழைவதற்கு 

முன்பாக ஒரு தினசரிப் பத்திரிகை ஒன்றினில், 

வார ராசிபலன்களை எழுதிடும்  ஆசிரியராகவே 

தனது வாழ்கைப் பயணத்தினைத்துவங்கினார் 

என்பது உங்களில் பலருக்கு மிகுந்த  ஆச்சர்யம் 

நிறைந்திட்ட செய்தியாக இருக்கலாம். ஆனால் 

அதுதான் உண்மை. 

அப்படி அங்கே அவர் சுமார் ஒன்பது மாதங்கள் 

பணிபுரிந்து வார ராசிபலன்கணித்து எழுதிவந்த 

நிலையில், அவருக்கு திரைத்துறையில் இருந்து 

அழைப்பு வந்திடவே, 

தனது ராசிபலன்கள் எழுதிடும் பணியை விடுத்து 

விலகிட முடிவும் செய்துஅதன்உரிமையாளரிடம் 

இந்த விஷயத்தை எடுத்துக் கூற, அதனால் 

அதிர்ந்து போன அந்தப் பத்திரிகை நிறுவன 

முதலாளி கவிஞரிடம், 

அட...என்னப்பா... நீ பாட்டுக்கு இப்படி 

திடுதிப்புன்னு இந்த ராசிபலன்கள் எழுதுறதை 

வுட்டுட்டுப் போயிட்டேன்னா 

என்னப்பா அர்த்தம் ? யாரால் இதை எழுதி 

நிறைவேற்றிட முடியும். ஆகவே இன்னொருவர் 

வந்து இந்தப் பணியைசெய்திட வரும்வரை நீ 

இங்கேதான் பணிபுரிந்தாக வேணும் 

என்று சொன்னபோது கவிஞர் அவரிடம் என்ன 

சொன்னார் என்று கேட்டால் :-

முதலாளி. இது ரொம்ப சுலபமானது, நான் 

தங்களது நாளிதழில் ஒன்பது மாதங்களுக்கு 

மேலாக பணிபுரிந்து இருக்கிறேன். மாதம்நான்கு 

முறை என்று வைத்துக்கொண்டால் ஒன்பது 

மாதங்களுக்கு சுமார் 36 தடவைகள் ராசி 

பலன்கள் எழுதியுள்ளேன். நீங்கள் என்ன 

செய்திட வேண்டும் என்று கேட்டால், இது 

மட்டுமே.

சென்ற வாரம், மேஷ ராசிக்கு எழுதிய பலனை 

இந்த வாரம் மீன ராசிக்கு மாற்றிவிடுங்கள். 

அடுத்த வாரம் அதனை மிதுன ராசிக்கு மாற்றிவிடுங்கள். 

அதுபோல சென்றவாரம் ரிஷப ராசிக்கு எழுதிய 

பலனை இந்த வாரம் கும்ப ராசிக்கும் அடுத்த 

வாரம் கடகராசிக்கும் மாற்றி எழுதுங்கள். 

அதே போல ஒவ்வொரு ராசிக்கும் 

சென்ற வாரம் எழுதியுள்ள பலன்களை வேறு 

வேறு ராசிகளுக்கு மாற்றி மாற்றி 

எழுதிக்கொண்டேபோங்கள்.

ஓராண்டுக்கும் மேலாக இந்தவகை பழக்கம் 

உங்களுக்கு கைகொடுக்கும் உதவிசெய்திடும். 

அப்போது முதலாளி கேட்டார் சரி நீ 

சொல்கின்றபடியே நாம் செய்வோம் என்று 

வைத்துக்கொண்டால் என்னடா இது 

போனவாரம் நமக்கு எழுதப்பட்ட பலன் 

ஆயிற்றே ? 

இது இந்தவாரம் அதேபாலன் வேறு 

இராசிக்கு அட்சரம் பிசகாமல் மாற்றி 

எழுதிடப்பட்டு உள்ளதே என்று யாரும் குற்றம் 

சுமத்திட மாட்டார்களா ? 


என்று வினவ கவிஞர் சிரித்துக்கொண்டே, 

முதலாளி, ராசிபலன்கள் படித்திடும் யாரும் 

தனது ராசியைப் படிப்பதைத் தவிர வேறு எந்த 

ராசியையும் பார்த்திடவும் மாட்டார்கள். 

படித்திடவும் மாட்டார்கள் என்று பதில் 

சொன்னாராம். 


அதுபோல இந்த ஜோதிடக்கலை என்பது 

வானத்தைவிடவும் நீளமானது. 

கடலை விடவும் ஆழமானது. 

இந்த பூமியை விடவும் பரப்பளவில் 

மிகமிகப்பெரியது. 

இதன் ஆரம்பத்தையும் முடிவையும் 

கண்டவர்கள் எவரும் இங்கே இல்லவே இல்லை.

ஆக ஒரு ஜாதகம் சிறப்பாக அமைந்திட முதலில் 

அந்த லக்னாதிபதியின் அமைப்பும் அம்சமும் 

மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று சொல்லி 

இந்தக் கட்டுரையை நான் இந்த அளவினில் 

நிறைவு செய்கின்றேன்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். ஜோதிடக்கலாநிதி. திருமலை.இரா.பாலு.

பின் குறிப்பு :- நாட்டினில் வாழ்ந்துவரும் அன்பர்கள்,
அவர்களது ஜாதகத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 
அதனை நீங்கள் என்னிடம் எந்தவிதமான கட்டணம் 
இல்லாமல் இலவசமாக கேட்டுத்தெரிந்துகொள்ளலாம் 
என்று இந்த இடத்தில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

கைபேசி எண் :- +91 99440 38532

E mail ID :-  astrobalu1954@gmail.com.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

உங்களில் யாருக்காவது பிறந்த நேர ( ஜனன கால ) ஜாதகம் இல்லையா ? கவலையை விடுங்கள். நான் கேட்கும் இந்த 3 விபரங்களைத் தாருங்கள். ஜாதகத்தை நான் உங்களுக்குத் தருகிறேன்!!








அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

உங்களில் யாருக்காவது பிறந்த நேர 

ஜாதகம் இல்லையே, என்ற ஆதங்கம் 

இருந்தால், இன்றோடு அதனை நீங்கள் 

இனிமேல் தவிர்த்திடுங்கள்.

நீங்கள் செய்திட வேண்டியது எல்லாம் கீழே 

குறித்த மூன்று தகவல்களை மட்டும் நீங்கள் 

எனது மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பினால் 

( astrobalu1954@gmail.com)


1)  பிறந்ததேதி.

2)  பிறந்த நேரம்.

3)  பிறந்த ஊர்.


நன்றி. வணக்கம்.

அன்புடன். திருமலை.இரா.பாலு.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஜோதிடம் என்பது உண்மையா இல்லை ஏமாற்றும் வேலையா ? ஒரு சிந்தனைக் கருத்து செறிவு !! உங்களின் பார்வைக்கு !!







பிஸ்மில்லா-ஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் எனது

அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும்

உரிய தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த

காலை வணக்கங்கள் உரித்தாகட்டும்.

இன்றைய இளைய தலைமுறையினரில்

மிகப்பெரும்பான்மையான நபர்களின் மனக் 

கருத்து என்ன என்று கேட்டால், ஜோதிடம்

என்பது எல்லாம் சுத்தப் பொய் என்றும் இது

ஒரு சரியான ஏமாற்றுகின்ற வேலை என்றும்

சொல்லிக்கொண்டு திரிகின்றனர். ஆனால்

உண்மை அதுவல்ல.கல்தோன்றிமண்தோன்றாக்

காலத்திற்கு முன் தோன்றியதுதான் இந்த

அரிய பெரிய ஜோதிடக்கலை என்பதுதான்

உண்மை. இதற்கு பல்வேறு வரலாற்று சாட்சிகள்

உண்டு. இருந்தாலும் மிகவும் சரியானதாக நம்

கண் முன்னே உள்ள ஒரு சாட்சிதான் இந்த

கிரகணம் வருவதை முன்கூட்டியே அறிந்து

வல்லுனர்கள் சொல்லுவதை ஒரு உதாரணமாக

நாம் கொள்ளலாம். இந்தக் கருத்திற்கு தமிழில்

ஒரு நடைமுறை வழக்கத்தில் உள்ள ஒரு நல்ல

அழகான சொற்றொடர் ஒன்று உண்டு. 


அதுதான் :-



சாமிதான் பொய் என்றால் சாணத்தில் பார் !!

சாஸ்த்திரம்தான் பொய் என்றால் வானத்தில் 

பார் !!




கடவுள் இருப்பது பொய் என்று நினைத்தால் 

சாணிக்குவியலைப் பார். குவியலாக அந்த 

சாணி இருக்கும் வரையில் அங்கே பூச்சிகள் 

புழுக்கள் பூரான்கள் மேலும் வண்டுகள் இது 

போல விஷகடித்தன்மை உள்ள பற்பல 

பூச்சிகள் அங்கே காணப்படும். அனால் அதே 

சமயம் அந்த சாணியில் இருந்து சிறிதளவு 

வழித்து எடுத்து இதுதான் நாம் 

வணங்கிடும் பிள்ளையார் ( விநாயகர் ) என்று 

நினைத்து அதனை வைத்தால் அதில் 

மேற்சொன்ன எந்தவிதமான பூச்சிகளும் 

காணப்படுவது கிடையாது.


அதேபோலத்தான், இந்தத் தேதியில், இன்ன 

மணியில் இந்த நிமிடத்தில் சூரிய கிரகணமோ 

அல்லது சந்திர கிரகணமோ நடைபெறும் என்ற 

விஷயத்தினை அறிவு பூர்வமாக ஆராய்ந்து 

அதனை முன்கூட்டியே இந்த உலகிற்கு 

அறிவித்திடும் சாஸ்திரமும் பொய் அல்ல 

என்ற இந்த இருவேறு விஷயங்களின் மூலமாக 

 நமக்கு கிடைத்திடும் இந்த உண்மையினால் 

ஜோதிடம் என்னும் அரிய பெரிய சாஸ்த்திரம் 

என்றென்றும்இப்பூவுலகில் நிலைத்து நிற்கும் 

என்றும் அது  பொய்யோ அல்லது சிலர் 

குறிப்பிடும் அளவில் அது ஒன்றும் ஏமாற்றும் 

வேலையும் அல்ல என்ற கருத்தினை இந்த 


                              " ஜோதிட உலகம் "


பதிவின் வாயிலாக நமது அருமையான 

வாசக கண்மணிகளுக்கு எடுத்து 

உரைத்து நன்றி பகர்ந்து விடைபெறுகின்றேன்.


வணக்கம் !!


அன்புடன்,

ஜோதிட சிரோன்மணி, ஜோதிட பூஷணம்,

திருமலை இரா பாலு. 

ஞாயிறு, 12 ஜூலை, 2015

விந்தையிலும் பெரிய விந்தையடி !! ( ஜோதிட விளக்கக்கட்டுரை எண் :- 1.)







அன்புத்தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும்

என் இனிமை நிறைந்த காலை வணக்கங்கள்.


இன்றைய தினம் எனது வலைதளமான


                     " ஜோதிட உலகம் "


எனும் இப்பகுதியில், 

" விந்தையிலும் பெரிய விந்தையடி "
எனும் தலைப்பினில் நான் உங்களுக்கு 

ஜோதிடம் சம்பந்தப்பட்ட பல்வேறு 

விளக்கங்களைப்பற்றி விவரமாக 

தெரிவிக்கலாம் என்று எண்ணியே 

எழுதலானேன்.


இந்த அண்டத்தை ( பூமியை ) படைத்த 

இறைவன் அதற்கு பல்வேறு 

காலகட்டங்களுக்கு முன்பாகவே 

நவ கிரகங்கள் என்று சொல்லக்கூடிய 

1)  சூரியன்,
2)  சந்திரன்.
3)  செவ்வாய்.
4)  வியாழன்.
5)  புதன்.
6)  சுக்கிரன்.
7)  சனி.

என ஏழு கிரகங்களையும், சாயா கிரகங்கள் 

என்று அழைக்கப்படுகின்ற இராகு & கேது 

என இரண்டு நிழல் கிரகங்களையும் படைத்து  
இந்த ஒன்பது கிரகங்களையும் பூமிக்கு மேலே 

பலகோடி மைல்கள் தூரத்திற்கு அப்பால் அவை 

ஒவ்வொன்றிற்கும் சொந்த வீடு, உச்சவீடு, நீச்ச 

வீடு, பகை வீடு, நேச வீடு என பன்னிரண்டு 

வீடுகளுக்குள் அவைகளை அடைத்து, அந்தப் 

பன்னிரண்டு வீடுகள் ஒவ்வொன்றிற்கும் தனித் 

தனியாக பெயர்களையும் தந்து அவைகள் 

முறையே :-

மேஷம், 

ரிஷபம்,

மிதுனம்,

கடகம்,

சிம்மம்,

கன்னி,

துலாம்,

விருச்சிகம்,

தனுசு,

மகரம்,

கும்பம்,

மீனம். 


என பெயரிட்டு படைத்து மகிழ்ந்தான். அதன் 

பின்னரே எல்லாம் வல்ல இறைவன் புல்,பூண்டு. 

தாவர, மிருக இனங்களைப் படித்தபின்னரே 

மனித இனத்தை அவன் படைத்ததாக வரலாறு 

நமக்குக் கூறுகிறது.  

அவன் படைத்த அந்த மனித இனத்தில் 

இறைவனின் ஆசியால் இங்கே 

தோன்றிய முனிவர்களும், ரிஷிகளும், 

கண்டுபிடித்த என்றுமே அழியாத ஒரு 

காலப்பெட்டகம்தான் இங்கே 

ஜோதிடம் என்று அழைக்கப்படுகிறது 

அன்பர்களே !!

அவர்கள் நமக்கு வகுத்துத்தந்த கணக்கில்தான் 

நாம் இன்று அந்த ஜோதிடம் என்னும் மாபெரும் 

சமுத்திரத்திர சாகரத்தில் 

பாய்மரபடகு விட்டுக்கொண்டு இருக்கிறோம் 

என்று கூறினால் அது மிகையாகாது.


ஜோதிடக்கலைபற்றிய பல்வேறுவகையான  

அடிப்படை பாடங்கள் அடுத்தடுத்து வர உள்ள 

கட்டுரைகளில் இங்கே இடம்பெறப் போகின்றது. 


இந்தக் கட்டுரைகளை நீங்கள் இடைவெளி 

விடாது படித்து வந்தாலே போதும். நீங்களும் 

பெரிய ஜோதிட மேதையாக வலம் வரலாம்.


மீண்டும் நாம் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.


நன்றி !!  வணக்கம் !!


அன்புடன்.


ஜோதிடபூஷணம். மதுரை TR.பாலு.

செவ்வாய், 7 ஜூலை, 2015

" ஜோதிட உலகம் "-- முகவுரை விளக்கம்-- ஜோதிட பூஷணம் மதுரை பாலு எழுதுகிறார் !!










உலகம் முழுதும் உள்ள தமிழர்களே !!



அனைவருக்கும் வணக்கம். 



இன்றுமுதல் ( 08-07-2015 ) உங்கள்அனைவருக்கும்  

எதிர்காலவாழ்விற்குப்பயனுள்ள  கட்டுரையை




                 "  ஜோ   தி   ட      உ  ல   க   ம்  "



என்னும் தலைப்பினில் எழுதலாம் என்று 


எண்ணியுள்ளேன்.


ஜோதிடம் என்றால் என்ன ?  நவ கிரகம், மானுட 


பிறவியில் கிரகங்கள் செய்திடும் பிரதிகூல 


மற்றும் அனுகூல நிகழ்வு,இவைகளைப் பற்றிய 


ஒரு விரிவான செய்திகள் அடங்கிய 


கட்டுரையாக இது அமைந்திருக்கும் என்றேநான் 


கருதுகிறேன்.



நீங்கள் அனைவரும் இந்தக்கட்டுரையை படித்து 


இன்புற வேண்டுகிறேன்.



நன்றி !!  வணக்கம்  !!


அன்புடன். மதுரை பாலு.